தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

குடும்பம்

                   குடும்பம் ஒரு கோவில்

  ஆதிகால வரலாற்றினையும் நாகரிங்களையும் ஆராய்ந்து பார்க்கும்போது குடுபத்தில் பெண்களின் தடம் மிக அழுத்தமானது.குடும்பம் எனும் தெய்வீகத்தன்மை வாய்ந்த கோயிலினுல் விற்றிருப்பவள் பெண்தான் என்புத யாராலும் மறுக்க முடியாது.குடிகாரகணவன் குடுபத்தினை கவனிக்காமல் தான் தோன்றித்தனமாக சுற்றும் போது அதை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருபவள் தான் பெண்.

      அடக்கம்.அமைதி.அன்பு.பொறுமை.மட்டுமின்றி அறநெறிகளில் கூறப்பட்ட பெண்மைக்கான அத்துனை நற்குணங்களும் அமையபெற்றவள் ஒரு நங்கை நல்லாள்.கட்டிய மஞ்சள் கயிறுக்கு கட்டுபட்டு கணவானுக்காக அவன் குடும்பத்திற்காக குழந்தைகளு்க்காக தன்னலம் கருதாது குடும்ப நலம் பேணுபவளாக ஒரு வுமைதாங்கியாய் வாழ்ந்து குடும்பத்திற்குள் தன்னை தொலைத்துக் கொள்கிறாள்.
   
   பண்புள்ள குடும்பம் அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவாகும் என்பது வள்ளுவன் வாக்கு.சச்சரவு.அன்பின்மை. குரோதம்.வன்மை.பொறாமை.கணவன் மீது வஞ்சம்.மனைவி மீது இரக்கமின்மை.குழந்தைகளிடம்அன்பு செலுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களினால் சில குடும்பங்கள் புயலின் நடுவே சிக்கிய சிறுபடகின் நிலையில் உள்ளன.குடும்பம் என்பது பெறும் காற்றாலும் அணையாத ஜெகஜோதியாக மிளிர வேண்டும்.
      
  தற்போதுள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமை சீர்குலைந்து ஆணும்.பெண்ணும் சண்டையிட்டு போலிஸ் கோர்ட் என அலையும் நிலை உள்ளது.ஒருவருக்கொருவர் அன்பிற்கு அடிமையாகி கட்டுண்டு இருக்க வேண்டுமே தவிர அதிகாரம் காட்டி வெட்டுண்டு கிடப்பது எந்த வகையில் பொருத்தமாகும். 
                                             அடுத்தவாரம் தொடரும் 

No comments:

Post a Comment