தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

மன ஆறுதல்

அன்பான குடும்ப தோழிகளே நாம் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் கடைசி வரை அனுபவிக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு எப்பொழுது தான்.இன்றைய காலத்தில் நம் பெண்ணிணத்திற்கு ஒரு ஆறுதல் சொல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.நாம் நினைத்தில் இவ்வுலகில் அடையாத வெற்றியே கிடையாது அத்தகைய திறமை படைத்தவர்கள் நம் பெண் சமுதாயம்.மாற்றங்கள் நாட்டில் மட்டும் அல்லாது நம் குடும்பத்திலும் ஒரு புத்துணர்ச்சி பொழிவுடன் மாற்ற களம் இறங்குவோம்.நம் பெண் இனத்திற்கு ஏற்படும் கொடுமைகளை நினைத்து நாம் இரக்கம் கொண்டால் போதுமா?.மீட்டெடுப்போம் பெண் தோழிகளின் கஷ்டங்களை.சிந்திப்போம்  வெற்றி வாகை சூடும் வெற்றி திருமங்கையாக இவ்வுலகில்.

தோழிகளே மன ஆறுதல் பகுதியில் நம் அனைத்து தரப்பு தோழிகளுக்கான மன அமைதிக்கான ஆறுதல் கருத்துகள் இடம் பெறும்.நீங்களும் உங்கள் மன கருத்துகளை இதன் முலம் பகிர்ந்து கொள்ளலாம்.மின்னஞ்சல் அல்லது உங்கள் பகுதி முலம் அனுப்பலாம். 

No comments:

Post a Comment