தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Saturday 21 February 2015

தமிழ் பெண் சுதந்திரம் சிறுகட்டுரை

அன்பான தமிழ் பெண் தோழிகளே இனிய தமிழ் வணக்கங்கள்

ஒரு தமிழ் பெண் விட்டின் குலமகளாகவும் நாட்டின் திருமகளாகவும் போற்றகூடிய அற்புத ஒளிவிளக்கு நம் தமிழ் பெண்கள்.ஆதிகால இதிகாசங்களில் நம் தமிழ் பெண்களின் சுதந்திரம் மற்றும் நடைமுறை பழக்கங்களை பற்றி மிக உன்னதமான கருத்துகளையும் காவியங்களாக படைத்து பெண்ணுரிமை பற்றி எடுத்துரைத்துள்ளனர் பலம்பெரும் புல வர்கள் மற்றும் கவிஞர்கள் என்பதை நாம் இன்றுவரை அறிந்த ஒன்றே.இதே போன்று அரச குலங்களில் அன்றைய காலங்களில் வாழ்ந்த தமிழ் பெண்களின் சுதந்திரத்தை அனைவரும் போற்றும் வகையில் அரசர்கள் பல்வேறு செயல்பாடுகள் தொடங்கப்பட்டதை இதிகாச புராணங்களின் கதைகள் முலம் அறிந்திருப்போம் தோழிகளே.

ஒரு பெண் இன்றைய சூழ்நிலையில் மாற்றங்களை எற்படுத்த முடியாமல் தடுக்ககூடிய காரணிகள் என்று பார்த்தால் ஆணாதிக்கம் என்னும் அடிமை சாசனம்.இன்றைய நவின காலங்களில் நம் தோழிகள் ஒரு சுதந்திரமான முடிவுகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.இதற்கு காரணம் அடிமை என்னும் கோட்பாடில் தான் வாழ்கிறோம் என்னும் மன நிலையே.ஆண் தோழர்களுக்கு மத்தியில் ஒரு கூண்டில் அடிமைபட்ட பச்சை கிளியை போன்றுதான் நம் வாழ்க்கை.சமுதாயத்தில் நமக்கான வாழ்வியல் நடைமுறை உரிமைகள் சுதந்திரமானதாக இருந்தாலும் அவை ஒரு சில தோழிகளுக்கு மட்டுமே.

சட்ட்ங்களும் பல்வேறு சலுகைகளும் நம் பெண்குலங்களுக்கு வழிவகுத்தாலும் அவை ஒரு சில வழிகளில் மட்டுமே பெண்ணுரிமை சுதந்திரத்தை தருகிறது.சுதந்திரமான முடிவுகளை மேற்கொள்ள கூடிய அற்புத காலங்கள் நம்மை நெருங்கிழினாலும் அவை நம் பார்வைக்கு நெடுந்தொலைவுகளாகவே உள்ளது.காரணம் நம் பெண் தோழிகளின் மனதில் இருக்கு ஒரு விதமான மன கட்டுபாடு அற்ற ஆசை குணதியசமே.(இரக்கமற்ற குணம்.பணஆசை.பொருளாஆசை).நம் பெண்குலத்தையும் அவர்களின் சுதந்திரதையும் காக்ககூடிய முதல் பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்தோழிகளே நம் பெண்குழந்தை பருவம் முதல் முதிர்மை வயதுவரை ஒரு சுதந்திரம் அற்ற மனநிலையுடனே வாழ்கிறோம்.நாமும் ஆண் தோழர்களுக்கு இணையாக சுதந்திரமாக வாழ தகுதி படைத்தவர்கள் தான்.பின்பு என் இந்நிலைப்பாடு.தோழிகளே முதலில் நமக்குள் ஒற்றுமை என்பது இல்லாதவரை நம் பெண்குலம் சுதந்திரமான காற்றை முழுமையாக பெற முடியாத ஒன்றாக சென்றிடும்.சமுதாயத்தில் மாற்றங்கள் பல இருந்தாலும் நம் பெண் இனத்திற்கு குறைவான ஒன்றுதான்.

தோழிகளே சுதந்திர உரிமைகளை நம் இல்லறத்திலும் சமுதாயத்திலும் மீட்டெடுக்கும் ஒரு தமிழ் பெண்ணாக மாறிடுவோம்.நம் பெண் இனத்தின் சுதந்திரமான வளர்ச்சியே நாட்டையும் வீட்டையும் முன்னேற்றமடைய செய்யும் ஒரு மாபெரும் பெண்சக்தி என்பதை அறிவோம்.ஒற்றுமை நம் தோழிகளின் இன்றியாமையாத ஒரு சக்தி.
தோழிகளே நம் அனைவரும் ஒன்றினைந்து வாழ்க்கையிலும்.மற்ற இன்னல்களிலும் பரிதவிக்கும் அவர்களை மீட்டெடுக்க உதவுவோம்.வருங்கால பெண் சமுதாயத்தின் சுதந்திரமான வாழ்க்கைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

Wednesday 11 February 2015

மன தாழ்வு ஒரு சிறு ஆறுதல் கட்டுரை

அன்பான என் அருமை தோழிகளே நம்முடைய வாழ்வில் இன்பம் துன்பம் என இரு வேறுப்பட்ட மாற்றங்களை அன்றாட அனுபவிக்கிறோம்.அந்த இரு வேறுபாடுகளிலும் நாம் சில நேரங்களில் மன தாழ்வு என்னும் ஒரு இருள் சூழ்ந்த பகுதியல் சிக்கி பரிதவிக்கிறோம்.இதற்கான காரணங்கள் நம்மிடையே ஏற்படும் ஒருவித மன அழுத்தமே.

மன அழுத்தம் தொடங்குவதற்கான ஆரம்ப காரணிகள் என்று பார்த்தால் நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளின் போது நம்மீது ஒரு முரண்ப்பட்ட கருத்துகளை தெரிவிக்கும் பொழுது அதனை பற்றி தொடர்ச்சியான சிந்தனையில் செயல்படுவது.குடும்ப பிரச்சனைகளினால் பரிதவிப்பது.பொருளாதாரம் தொடர்பான நிகழ்வுகள் போன்ற செயல்பாடுகளினால் நம் மன அமைதியை தொலைத்து நிம்மதியற்று வாழ்கிறோம்.

Sunday 1 February 2015

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு-கட்டுரை தொகுப்பு

என் அருமையான இல்லற மற்றும் இல்லற வாழ்வில் அடியேடுத்து வைக்கும், வைக்க போகும் தமிழ் தோழிகளே தமிழ் அன்னை தளத்தின் இனிய வணக்கங்கள்

கணவன்-மனைவி என்னும் உறவுபந்தம் நம் இரு மனங்கள் ஒன்றினைந்து ஒரு குடும்பத்தையும் சமுதாயத்தையும் உருவாக்க கூடியது.நம் வாழ்க்கையின் முதல் பயணத்தை நம் குடும்ப உறவுகளான பாசமீகு பெரியவர்களின் ஆசியுடன் தொடங்கி வைத்த இப்பொருட்பில் நமக்குள் ஏன் அந்த மனகசப்பு மற்றும் கருத்து வேறுபாடு.தோழிகளே வாழ்க்கை என்பது நாம் ஒருமுறை வாழ்ந்து அதில் சாதனை படைந்து செல்ல கூடிய ஒன்றாகும்.அதில் ஏற்படும் ஒரு சில இடர்பாடுகளினால் நம் வாழ்க்கையினை நாமே கேள்வி குறியாக்கி விடுகிறோம்.தோழிகளே நமக்குள் ஆயிரம்