தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday 11 January 2015

தமிழ் பெண் சமுதாயம் விழிப்புணர்வு கட்டுரை

விழிப்புணர்வு கட்டுரை

சமுதாயத்தின் முதல் அங்கமாக திகழும் தெய்வம் பெண்.அத்தகைய பெண் சமுதாயத்திற்கு இந்நாட்டில் நடக்கும் அவலங்களை பார்த்தால் மனம் கொத்தளிக்கிறது.தோழிகளே நம் தமிழ் பாரம்பாரியம் மிக தொன்மையானது.அத்தகைய பாரம்பரி்யத்தில் பிறந்த நமக்கு பல்வேறு இன்னல்கள் எற்படுகிறது.குறிப்பாக சொன்னால் பெண் சுதந்திரம் இன்று பொய் அளவிளேயே காணப்படுகிறது.ஆம் நாட்டில் நடக்கும் பாலிய குற்றங்கள் மற்றும் குடும்ப கருத்து வேறுபாடு என பலவேறு அவலங்களை சொல்லி கொண்டு செல்லாம்.இத்தகைய மாற்றங்களுக்கு காரணம் எங்கிருந்து தோன்றுகிறது.நம் சமுதாயத்தின் ஏற்படும் காலச்சர மற்றும் மேலைநாட்டு காலச்சர சீரழிவு தான்.பெண்ணாக பிறந்தால் வாழ்க்கையின் முற்பகுதிய பிறந்த வீட்டிலும்.பிற்பகுதி புகுந்த வீட்டிலும் வாழும் நிலைதான்.ஆனால் அவற்றில் நிறைவான மனநிலை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் பெண்கள் எத்தனை சதவிதம்.பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறியகாலங்கள் மறைந்து இன்று பெண்கள் நாட்டில் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆணாதிக்கம் நிறைந்த சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு ஆறுதல் கூறும் நிலைகூட அற்றவுலகமாக சென்றுவிட்டது.அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு முன்னோடியாக திகழும் பெண்களின் சுதந்தரம் சற்று குறைவுதான்.தோழிகளே சமுதாயத்தில் நம் பெண் இனத்தின் மீது பார்க்கும் பார்வைகள் பற்பல.அவற்றில் இருந்து விடுபட மன தையரியத்துடன் விழித்தெழுவோம்.நம் தோழிகளை காப்பற்றுவது நம் கரங்களில் தான் இருக்கிறது.பொருளாதரத்தில் பின்தாக்கிய பல பெண்கள் அவதியுறும் நிலையில் இருந்து மீட்டெடுக்கும் சக்தியாக மாறுவோம்.

No comments:

Post a Comment